திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

தமிழீழமா சுதந்திரக்கட்சியின் தீர்வு:நாமல் கேள்வி

உள்ளுராட்சி தேர்தலில் யாழில் நடைபெற்ற சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப்பாடல் ஒலிக்க விடப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே சிறீலங்கா சுதந்திரக்கட்சி இதன் மூலம் தமிழீழத்தை ஆதரிக்கின்றதாவென நாமல்ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

namal
தனது ருவிட்டரில் இதனை கேள்விக்குள்ளாக்கியுள்ளாக்கியுள்ள அவர் உள்ளுர் ஊடகவியலாளரது நிலைத்தகவலை மேற்கோள் காட்டியுமுள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றிருந்தது. அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தன.
சிறீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டு வைத்திருந்தார்.
இதனிடையே சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சாரத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் பிரச்சார பாடல்களை ஒலிக்கவிட்டமை தேர்தல் முறைகேடு என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கபேயின் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவ்வமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

முகப்பு
Selva Zug 2