புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

கல்லுண்டாய் குப்பை மேடு மக்கள் சார்பாக நீதிமன்றம் கட்டளை !

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும் சுகாதாரத்திற்கு கேடாகவும் காணப்பட்ட “கல்லுண்டாய் குப்பை மேடு” பிரச்சனைக்கு இன்று (12) மல்லாகம் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கட்டளை வழங்கியுள்ளது.

குப்பை மேட்டை சூழ மூன்று மாதங்களுக்குள் வேலியமைக்கவேண்டும், மலக்கழிவுகள் கொட்டத்தடை, பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம், கழிவு நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவேண்டும் என்றவாறாக கட்டளையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் சுமார் இரண்டு வருடங்களாக மக்கள் சார்பாக ஆஜராகிவந்த சட்டத்தரணி க.சுகாஸ் குறித்த பிரச்சனைக்காக குரல் கொடுத்த பொது அமைப்புக்கள், ஊடகங்கள், பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முகப்பு
Selva Zug 2