வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

அம்பாறையில் சடலமாக மீட்கப்பட்டது சிசு – விசாரணைகள் ஆரம்பம்

உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சிசு பிறந்த சில மணி நேரங்களில் தூக்கி எறியப்பட்டிருப்பதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை ஆலையடிவேம்பு நாவற்காடு பகுதியில் உருக்குழைந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

தலையில் காயங்களுடன் சிசுவொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முகப்பு
Selva Zug 2