வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

சாத்தானின் வேதம் ஓதும் இலங்கை படைகள்!

army
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் காடுகளையும் இயற்கை வளங்களையும் அழிப்பதில் இன்றுவரை இலங்கையின் முப்படைகளும் ஒன்றிற்கு ஒன்று சளைக்காது பாடுபட்டுவருகின்றன.

யுத்த காலத்தில் குண்டுகளால் காடுகளை எரித்ததுடன் தமது தேவைகளிற்கென மரங்களை வெட்டித்தள்ளவும் படையினர் தயங்கவில்லை.
குறிப்பாக யாழ்.குடாநாட்டில் குண்டுதாக்குதல்களிலிருந்து தப்பி வீதியோர மரங்கள் வகை தொகையின்றி வெட்டி சரிக்கப்பட்டன.

இந்நிலையினில் தற்போது ஜநாவினில் பணி,மனித நேய நடவடிக்கைகள் என புதிய முகமூடியுடன் நடமாடும் படையினர் தற்போது மரநடுகையிலும் குதித்துள்ளனராம்.

போர்ப்படையினரின் ஒழுங்கமைப்பில் மரங்களை நடுவோம் நாட்டை காப்போமென்ற பேரில் மரங்கன்றுகளை படையினர் விநியோகிப்பதாக அறிவித்துமுள்ளனர்.
வடகிழக்கில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரை தொடர்ந்து பேண ஏதுவாக மூன்றிலொரு பகுதி படையினரை சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக அண்மையில் இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்திருந்தார்.
ஒருபுறம் விவசாய நடவடிக்கைகள் மறுபுறம் கட்டுமான தொழில்களென படையினர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கையின் அடுத்தர கட்டமாக மரம் நட படையினர் தொடங்கியுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2