புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

மைத்திரி பக்கம் பாய்கிறார் கூட்டு எதிரணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்

crossoverமகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரே, மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து ஆதரவு தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறியானி விஜேவிக்கிரம மற்றும் வீரகுமார திசநாயக்க ஆகியோர் சிறிலங்கா அதிபரின் தரப்புக்குப் பாய்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2