திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

மாவீரர் துயிலுமில்ல சிரமதானங்கள் மும்முரம்!

alanku1
படையினரின் கட்டுப்பாட்டினிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களினில் வெளியே பொருத்தமான இடங்களை தெரிவு செய்து விளக்கேற்றல் மற்றும் நினைவேந்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலுமில்லங்கள் விடுத்து ஏனைய துயிலுமில்லங்களை உடனடியாக புனரமைக்கும் ஏற்பாடுகள் மும்முரமடைந்துள்ளது.

06-tamilarul.net
இதனிடையே மாவீரர் நாளினை முன்னிட்டு மருதங்கேணி உடுத்துறை,இரணைப்பாலை மற்றும் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்களும் சிரமதான மூலம் துப்புரவாக்கப்பட்டு வருகின்றது.

udu1
மாவீரர் நாளை சிறப்பாக நினைவு கூரும் வகையில் இவ்வாரம் முதல் விளையாட்டு கழக உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள், கிராம அமைப்புக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து பல பகுதிகளிலும் சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் கிராம மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

முகப்பு
Selva Zug 2