வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

ஜெனிவாவில் நாளை சிறிலங்கா குறித்த மதிப்பீடு

UN Logo
UN Logo

UN Logo

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாளை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த மதிப்பீடுகள் இடம்பெறவுள்ளன.

ஜெனிவா நேரப்படி நாளை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா குறித்த மதிப்பீடுகளும் விவாதமும் இடம்பெறவுள்ளது.

இந்த பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா தரப்புக்கு குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவோ தலைமை தாங்கவில்லை.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவே சிறிலங்கா குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

இந்தக் குழுவில், வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சிறிலங்கா அதிபர் செயலகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முகப்பு
Selva Zug 2