திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மைத்திரியை சந்திக்கிறார்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் மைத்திரியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கான நாளினை மைத்திரியை தமக்கு அறிவித்துள்ளதாகவும்இ குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் 31 பேர் நாளை
கொழும்புக்கு செல்லவுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மைத்திரியையிடம் தனியாக சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதி அறிவிப்பதாக மைத்திரி குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிரகாரம் நாளை மறுதினம் நண்பகல் மைத்திரியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. குறித்த சந்திப்பிற்காக தாம் நாளை செல்லவுள்ளதாகவும்இ குறித்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த மைத்திரியின் செயற்பாடானது வரவேற்க தக்கது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தம்மை அழைத்த ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவார் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முகப்பு
Selva Zug 2