வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

இந்தியாவுக்கு ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்கள் – அமெரிக்கா

தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, இத்தகைய உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்குமாறு அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேட்டுக் கொண்டார். அதம்படி, ஆயுதங்கள் இல்லாத 22 கார்டியன் ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அரசு சம்மதித்தது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களுடன் கூடிய சி அவெஞ்சர் ரக ஆளில்லா உளவு விமானங்களை வாங்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது. சுமார் 800 கோடி டாலர் செலவில் இவ்வகையிலான 100 விமானங்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

முகப்பு
Selva Zug 2