திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

யாழில் பொலிஸ் ,விசேட அதிரடிப்படை குவிப்பு!

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் தற்பொழுது பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இதனால் குறித்த பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதி தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் நகர் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகிய பகுதிகளிலேயே குறித்த பதற்ற நிலை காணப்படுகிறது.

அரியாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் யாழ் போதனா வைத்தியசாலையை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

இதேவேளை மரணமடைந்த இளைஞனுடன் சென்ற மற்றுமோர் இளைஞர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்று கூறியிருந்த நிலையில் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முகப்பு
Selva Zug 2