திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

சிறையில் இருந்து சிங்களச் சகோதரனுக்கு:யாழில் வெளியானது!

sat1தமிழ் அரசியல் கைதியும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவருமான விவேகானந்தனூர் சதீஸின் ‘சிறையில் இருந்து சிங்களச் சகோதரனுக்கு…!’ கவிதை நூல் வெளியீடும், ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிதை நூல் அறிமுக நிகழ்வும் யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்றிருந்தது.எழுகலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் இன்று 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்பு உரையினை சமூக ஆர்வலர் கொட்டடிக் கோமகன் நிகழ்த்த நூல் வெளியீட்டு உரை, ஆய்வுரை மற்றும் கருத்துரைகளை இலக்கியப் படைப்பாளிகளான கை. சரவணன், அஜந்தகுமார், சித்ராதர், மயூரரூபன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
sat3
நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் முதன்மை மற்றும் சிறப்புப் பிரதிகளை நூலாசிரியரின் தாயாரான திருமதி செ.மகேஸ்வரி வெளியீட்டு வழங்க யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, படைப்பாளிகள் உலகம் அமைப்பின் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிறைவாக நன்றியுரையை நூலாசிரியரின் புதல்வியான செல்வி. காவியா சதீஸ்குமார் நிகழ்த்தியிருந்தார்.
sat2
இந்நிகழ்வில் படைப்பாளிகள், இலக்கியப் பிரியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முகப்பு
Selva Zug 2