வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

கவர்ச்சி மிகு நுண்கடன் திட்டத்தால்! தற்கொலை செய்யும் குடுப்ப பெண்கள்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்திற்கு உட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் தற்கயாகேஸ்வவர் ஆலயத்திற்கு அண்மித்த வீதியில் கணபதிப்பிள்ளை விஜயலெட்சுமி (46 வயது) என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

20171022_081252

இரவு வேளையில் தூக்கிட்டமையால் இன்று 2017.10.22 காலை வேளையயிலேயே இனம் காணப்பட்டு காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு. விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. திடிர் மரணவிசாரணை அதிகாரி கணேஸ்தாஸ் தலைமையில் மேலதிக விசாரணை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆறு பிள்ளைகளின் தாயான இவர் நுண்கடன் வழங்கல் பிரச்சினை காரணமாக இறந்திருக்கலாம் என்று பொதுமக்கள் விசாரணையின் மூலம் கூறுவது குறிப்பிடத் தக்கது.

20171022_082707

தற்போது பெருகி வரும் கவர்ச்சி மிகு நுண்கடன் திட்டங்களின் மூலம் ஏழை மக்கள் பாரமுகமாக சிக்குண்டு தற்கொலை செய்துகொள்ளும் வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. மாதம், கிழமை, நாள் எனப் படிப்பறிவு குறைந்த பாமர மக்கள் குறைந்த பணத்தினை கடனாகப் பெற்று கூடிய வட்டியினை செலுத்தவேண்டி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழை மக்களே குறிப்பாக குடும்பப் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். இதற்கான தீர்வினை தற்போதய அரசு முன்வைக்குமா?

20171022_084514

20171022_091748

20171022_091753

முகப்பு
Selva Zug 2