வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு!

shoot

ariya

யாழ்புறநகர்ப் பகுதியில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ் அரியாலை கிழக்கு உதயபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இன்று பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ றிக்மன் எனும் இளைஞன் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் அவர் தற்போது யாழ் போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர் குறித்த இளைஞனை பின்புறமாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதே வேளை குறித்த நபர் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள உறவினர்கள் இதோ வெளிக்கிட்டு வந்து விடுகின்றேன் எனக் கூறி விட்டு வெளிக்கிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே வேளை சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் பிராந்திய பொலிசார் மற்றும் தடயவில் பொலிசார் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் காயமடைந்த இளைஞனுடன் சென்றதாகக் கூறப்படும் அவரது நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் மரணமானதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முகப்பு
Selva Zug 2