வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் தற்­போது கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ளமை உண்­மை­தான்!

கூட்டு அரசு பல வாக்­கு­று­தி­களை வழங்கி ஆட்­சிக்கு வந்­தது. அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் தற்­போது கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ளமை உண்­மை­தான்.

இவ்­வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ டி கிரிப்­பி­டம் நேரில் ஒப்­புக்­கொண்­டார் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய.

ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ நாடா­ளு­மன்­றத்­துக்கு நேற்­று­முன்­தி­னம் சென்று முத்­த­ரப்பு சந்­திப்­புக்­களை நடத்­தி­னார்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன, சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரைச் சந்­தித்து. இடைக்­கால அறிக்கை குறித்­துக் கேட்­ட­றிந்­தார்.

இரண்­டா­வது சந்­திப்பை நாடா­ளு­மன்­றத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளு­டன் நடத்­தி­னார். மூன்­றா­வது சந்­திப்பை சபா­நா­ய­க­ரு­டன் நடத்­தி­னார்.

இந்­தச் சந்­திப்­பில் சபா­ப­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் குறித்­தும், பயங்­க­ர­வா­தச் தடைச் சட்­ட­மும் அதன் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பி­லும் சபா­நா­ய­க­ரு­ட­னான சந்­திப்­பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் அதிக கவ­னம் செலுத்­தி­னார்

‘‘கூட்டு அரசு பல வாக்­கு­று­தி­களை வழங்கி ஆட்­சிக்கு வந்­தது. ஆனால், அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் தற்­போ­தைய நிலை­யில் கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ளமை உண்­மை­தான். எனி­னும், வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் அரசு உறு­தி­யாக உள்­ளது’’, என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ள­ரி­டம் சபா­நா­ய­கர் தெரி­வித்­தார்.

‘‘பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­கும் நாட்டு மக்­க­ளுக்­கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வது அர­சின் கடமை. அதி­லி­ருந்து அரசு ஒரு­போ­தும் பின்­வாங்­கக்­கூ­டாது’’ என்­றும் இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்

முகப்பு
Selva Zug 2