வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

பேசுவதாக காண்பிப்பதே இலங்கை அரசின் வேலை: கு.குருபரன்

 

இலங்கை அரசு அனைத்து மட்டங்களுடனும் பேசிக்கொண்டிருப்பது போன்ற மாயையினை சர்வதேசத்திற்கும் வெளியேயும் காண்பித்துக்கொண்டிருக்கின்றது.உண்மையினில் அவ்வாறான சந்திப்புக்களினில் ஏதும் நடந்திருக்கவில்லையென தெரிவித்துள்ள சட்டத்தரணி கு.குருபரன்.

யாழ்.பல்கலைக்கழகத்தினில் மாணவர்களான சுலக்சன்-கஜன் முதலாவது ஆண்டு நினைவு தினத்தினில் அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார்.

இலங்கை காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களான சுலக்சன்-கஜன் இருவர் தொடர்பினில் பல்கலைக்கழக சமூகத்திற்கு மைத்திரி கடந்த ஆண்டினில் வழங்கிய உறுதி மொழிகள் எவையுமே நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையினில் தற்போது அரசியல் கைதிகள் விவகாரத்திலும் ஜனாதிபதியுடனான சந்திப்பினை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியுள்ள நிலையினில் கு.குருபரன் இத்தகைய கருத்துக்களினை முன்வைத்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2