வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு! விடுதலை கிடைக்குமா?

 2உணவு தவிப்பு  போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் விவ­கா­ரம் தொடர்­பில்   மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­டன் இன்று இரண்டு தரப்­புக்­கள் சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்­ளன.

உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றிய யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் தனி­யா­க­வும் போராட்டங்களை திசை திருப்பும்  வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தலை­மை­யில் அர­சி­யல் கைதி­க­ளின் உற­வி­னர்­கள் தனி­யா­க­வும் இந்­தச் சந்­திப்­பு­க­ளில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

வவு­னி­யா­வில் 4 ஆண்­டு­க­ளாக நடந்­து­வந்த வழக்கு அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றுக்கு இட­மாற்­றப்­பட்­டதை எதிர்த்து தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் கடந்த மாதம் 25ஆம் திக­தி­யி­லி­ருந்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

இவர்­க­ளது கோரிக்­கையை நிறை­வேற்­று­மா­றும், தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்­கு­மா­றும் கோரி கடந்த வெள்­ளிக் கிழமை வடக்­கில் முழு அடைப்­புப் போராட்­டம், கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் என்­பன முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் வடக்கு மாகாண ஆளு­நர் ஊடாக, அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவை இது தொடர்­பில் சந்­திப்­ப­தற்கு வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­த­னர்.

இதற்கு அமை­வாக இன்று காலை 10 மணிக்கு அரச தலை­வரை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் சந்­திக்­க­வுள்­ள­னர்.

இந்­தக் குழு­வில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள அர­சி­யல் கைதி­யான ம.சுலக் ஷனின் சகோ­த­ரி­யும் கலந்து கொள்­ள­வுள்­ளார். அவ­ரும் பல்­க­லைக்­க­ழக மாண­வி­யா­வார்.

இதே­வேளை, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தலை­மை­யில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரி­ன­தும் உற­வி­னர்­கள் இன்று மதி­யம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வைச் சந்­தித்து இந்த விட­யம் குறித்து நேரில் பேச­வுள்­ள­னர்.

முகப்பு
Selva Zug 2