வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் மேலும் அதிகரிப்பு!

நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை பிரித்து, அதன் அடிப்படையில் புதிய பிரதேசபைகளை வர்த்தமானியில் அறிவித்தப் பின்னர், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை மற்றுமொரு சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபைகளை பிரித்து மேலும் 4 புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு தற்போதைக்கு இணங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருவமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்

முகப்பு
Selva Zug 2