ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

அரசியல் கைதிகள் குறித்து இன்றைய தினம் பேச்சுவார்த்தை!

அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் குறித்து இன்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

கடந்த நாடாளுமன்ற அமர்வில் வைத்து குறித்த சந்திப்பு தொடர்பில், சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தகவல் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், நீதி அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பை எமது செய்தி சேவை வினவியப் போது, இந்த பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், இன்னும் தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது

முகப்பு
Selva Zug 2