திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

தேர்தல் செலவுகளுக்கு வருகிறது கட்டுப்பாடு!

தேர்தல்களின் போது, கட்சிகளும் வேட்பாளர்களும் மேற்கொள்ளும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தல்களில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது காணப்படும் சட்டத்தின்படி, கட்சிகளாலோ அல்லது தனிநபர்களாலோ, தேர்தல்களின் போது செலவுசெய்யப்படும் பணம் தொடர்பான கட்டுப்பாடு கிடையாது.

இதன் காரணமாக, அதிக பணத்தைச் செலவளித்து, தேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது என்று, தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இதற்கான கருத்தொற்றுமை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கெனவே காணப்படும் சட்டத்தைத் திருத்தவும், கட்டுப்பாடில்லாத பணச் செலவளிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான திருத்தத்தை மேற்கொள்ளவும் சமர்ப்பித்த முன்மொழிவுக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2