செவ்வாய், 17 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

திட்டிதீர்க்கும் நோயால் சுமந்திரன் பாதிப்பு:மனோகணேசன் தகவல்!

முஸ்லிம் மக்களின் ஒப்புதலுடன் வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி, மதசார்பின்மை ஆகியன, நண்பர் எம்.ஏ.சுமந்திரன் அரசியலுக்கு வரமுன் இருந்தே என் அரசியல் நிலைப்பாடுகள்.அதனை புரியாது எவரையாவது திட்டித்தீர்க்க வேண்டிய நிலையினில் சுமந்திரன் இருப்பதாக நையாண்டி செய்துள்ளார் மற்றொரு அரச அமைச்சரான மனோ கணேசன்.
வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஸ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார், நண்பர் சுமந்திரன் எம்பி என்னை திட்டி தீர்த்திருப்பதில் எனக்கு அவர் மீது கோபம் எதுவும் இல்லை. இன்று அவருக்கு ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகையால் எவரையாவது சுட்டிக்காட்டி, இவர்கள் ஒன்றும் பேசவில்லை, ஒன்றும் செய்யவில்லை என்று பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டது. பாவம் அவர், இப்படி எதையாவது பேசிவிட்டு போகட்டுமெனவம் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் ஒப்புதலுடன் வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி, மதசார்பின்மை ஆகியன, நண்பர் சுமந்திரன் அரசியலுக்கு வரமுன் இருந்தே என் அரசியல் நிலைப்பாடுகள்.
ஆனால், இந்த நாட்டிலேயும், அரசாங்கத்துக்கு உள்ளேயும், வழிகாட்டல் குழுவுக்கு உள்ளேயும் இவற்றுக்கு இன்று சாத்தியம் இல்லை. இந்த உண்மையை நான் வழிகாட்டல் குழு அமைக்கப்பட்ட போதே சொன்னேன். ஏனென்றால் இது எல்லோருக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். இது ஒன்றும் புது விடயமல்ல.
உண்மையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்திருந்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதுடன் நின்றிருப்பேன். ஏனெனில் அதுவே, சொல்லொணா போர்த்துன்பங்களை சந்தித்த ஈழத்தமிழ் மக்கள், சிங்கள தேசத்துக்கு காட்டும் மிகப்பெரிய சமாதான அடையாளம் ஆகும்.
“நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறோம். எதிர்கட்சி தலைமையையும் ஏற்கிறோம். ஆனால், வழிகாட்டல் குழுவுக்கு வரமாட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை தெற்கில் நீங்களே பேசி, முடிவு செய்து, தீர்வு பொதியை சர்வதேச சமூகம் ஊடாக எங்களுக்கு தாருங்கள்” என்றும் ஐதேக, ஸ்ரீலசு கட்சி தலைமைகளுக்கு கூறியிருப்பேன்.
ஆனால், கூட்டமைப்பின் வழிகாட்டல் வேறு. அது அவர்களது கொள்கைவழி. அவர்களுக்கு சரி என்று பட்டதை அவர்கள் செய்துள்ளார்கள்.
இன்று, பேரம் பேச எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் மேஜையில் வைத்த பிறகு என்னத்தை பேசுவது? ஆகவே தான் மட்டுமே வழிகாட்டல் குழுவில் பேசினேன். ஏனையோர் ஒன்றும் பேசவில்லை என்று சுமந்திரன் எம்பி பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.
இதையெல்லாம் மனதில் கொண்டுதான், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஈழ, மலையக, பிரதேச பேதங்களையெல்லாம் கடந்த “தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்” அமைக்க வேண்டும் என்ற யோசனையை நான் எப்போதோ முன் வைத்தேன். அது ஏன் நடைமுறையாகவில்லை என எல்லா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தனித்தனியாகதான் கேட்டுப்பார்க்க வேண்டுமெனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2