புதன், 13 டிசம்பர் 2017
Selva Zug 2

இரா.சம்பந்தனும் இன்று கடிதம் எழுதினார்?

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுவிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (12) ம் திகதி ஒருவாறாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தமது வழக்கு விசாரணைகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, இன்று 18 ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் பிரதிகள் பிரதமர்,நீதி அமைச்சர் ,சட்டமா அதிபர் மற்றும் ஊடகங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2