திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

யாழ் பல்கலைக்கழகமும் நாளைய  கர்த்தாலுக்கு ஆதரவு!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை இடம்பெறும் வடகிழக்கு மாகாணம் தழுவிய பூரண கர்த்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவை வழங்கி நிற்கிறது ,

இது தொடர்பில் மாணவர் ஒன்றியம்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் ……

கடந்த  18 நாட்களாக அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் 3 அரசியல் கைதிகளின் நியாயபுர்வமான கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற கூறி பல்கலை கழக மாணவர்களால் போராட்டம்  ஒன்று  அண்மையில் முன்னெடுக்கப்பட்டதுuniver

இதற்கு உரிய தரப்பினர் எந்தவொரு நடவடிக்கையும்  எடுக்காது அசமந்த  போக்கில் இருந்தமையால்  தமிழ்  அரசியல்  கைதிகள் மூவரின்  நிலையும் கவலைக்கிடமானது

இதனை கருத்தில்  கொண்டு அவர்களுக்கு  உரிய  தீர்வை   பெற்று  தரக்கோரி நாளைய  தினம்  நடைபெற  இருக்கும்  வடகிழக்கு மாகாணம் தழுவிய  பூரண கர்த்தாலுக்கு யாழ்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகிய  நாம்  அழைப்பு விடுப்பதோடு ,இப்போரட்டத்திற்கு அனைத்து வர்த்தக சங்கங்கள் ,பாடசாலைகள் , சிவில் சமூகங்கள் ,அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் பூரண ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

மேலும்  இது தொடர்பில்  உரிய  நடவடிக்கைகள் எதுவும்  எடுக்கப்படா விட்டால் இப்போராட்டத்தை வேறு வடிவங்களில் தொடர்வோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முகப்பு
Selva Zug 2