திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்!

பிந்திய செய்தி
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் இறுதி யுத்த பகுதியான முள்ளிவாய்க்காலிற்கு இன்று காலை பயணம் செய்துள்ளார்.உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பே இன்று காலை முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் செய்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் வணபிதா எழில் அடிகளாரால் நிர்மாணிக்கப்பட்டு அரசினால் இவ்வாண்டு தடுத்து நிறுத்தப்பட்ட இனஅழிப்பினில் கொல்லப்பட்டவர்களது நினைவுதூபியினை அவர் பார்வையிட்டுள்ளார்.அத்துடன் குறித்த தூபி நிர்மாணம் தொடர்பினில் மைத்திரி-ரணில் அரசினால் மேற்கொள்ள அச்சுறுத்தல்கள்,விசாரணைகள் தொடர்பினில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை பற்றி கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அம்பலவன் பொக்கணை பகுதிக்கும் பயணம் செய்த அவர் படையினரது இரகசிய முகாம்களினிலிருந்து தப்பித்து வந்து சாட்சியமாகவுள்ள சிலரை சந்தித்ததாக சொல்லப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக நிலவிடுவிப்பினை வலியுறுத்தி நூறு நாட்களை தாண்nடி போராட்டங்களை முன்னெடுத்துவரும் கேப்பாபுலவு மக்களையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அவர்களது கோரிக்கைகள் தொடர்பினில் மக்கள் கண்ணீர் ஊடே எடுத்து விளக்கியிருந்தனர்.
தமது பயணத்தின் தொடர்ச்சியாக இன்று மதியம் கிளிநொச்சி செல்லும் அவர் அங்கு தொடர்போராட்டத்தினில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களையும் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பொது அமர்வு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் இவர் சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

முந்தைய செய்தி

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளார்.

இவர் இன்று காலை முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று, அங்கு காணப்படும் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்டுள்ளார்.1

பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்காலில் கிழக்கு சின்னப்பர் தேவாலய வளாகத்தில் யுத்தத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக பதிக்கப்பட்ட நினைவுக்கற்களை பார்வையிட்டுள்ளார்.

மேலும் குறித்த நினைவாலயம் தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜனிடம் கலந்துரையாடியுள்ளார்.2

அங்கு  காணாமற் போனோரின் உறவினர்கள் அவ்விடத்தில் வைத்து பப்லோ டி கிரிப்பிடம் மகஜர்களை கையளித்துள்ளனர்.

யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.5

 

 

முகப்பு
Selva Zug 2