திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத அரசியல் கைதிகள்!

முல்­லைத்­தீ­வை சேர்ந்த மூன்று அர­சி­யல் கைதி­கள் 15 வருட சிறைத் தண்­ட­னைக் கா­லம் முடிந்த பின்னரும், விடு­விக்­கப்­ப­ட­ வில்லை. மாலை­தீவு அர­சால் 15 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு இலங்கை அர­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்­களே இவ்­வாறு இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டா­மல் உள்­ள­னர்.

அவர்­களை விடு­விக்­கு­மாறு சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு மற்­றும் மீள்­கு­டி­ யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­த­னி­டம் கோரிக்கை விடுத்து 3 மாதங்­கள் கடந்­து­ விட்­டன. ஆனால் இன்­று­வரை அவர் பதி­ல­ளிக்­க­வில்லை என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்­டப் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் தெரி­வித்­தார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு மேமாதம் 18ஆம் திகதி மாலை­தீ­வுக் கடற் பிர­தே­சத்­தில் வைத்து சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் இலங்­கை­யின் வடக்கு பகுதி இளை­ஞர்­கள் மூவர் மாலை­தீவு அர­சால் கைது­செய்­யப்­பட்­ட­னர். இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­ட­வர்­கள் குற்­ற­வா­ளி­கள் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு அந்­நாட்டு நீதி­மன்­றி­னால் 15 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தண்­ட­னையை இலங்­கைச் சிறை­யில் அனு­ப­விக்­க­லாம் என கூறி அவர்­கள் இலங்­கை­ அர சிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­னர்.

ஓர் ஆண்டு சிறைத் தண் டனை என்­பது தொடர்ச்­சி­ யாக 8 மாதங்­க­ளும் 10 நாள் க­ளுமே ஆகும். இதுவே இரு­நா­டு­க­ளி­ன­தும் நடை­முறை. இவர்­க­ளின் 15 ஆண்டு தண்­ட­னைக்­கா­லம் கடந்த மேயு­டன் நிறை­வு­ பெற்­று­விட்­டது. அவர்­களை விடு­விக்­கு­மாறு பெற்றோர் என்­னி­டம் கோரிக்கை விடுத்­த­னர். நான் இதனைக் கடந்த ஜுலை மாதம் 2ஆம் திகதி சிறைச்­சா­லை­கள் அமைச்­ச­ரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றேன். சட்­டமா அதி­பர் மற்­றும் சிறைச்­சாலை ஆணை­யா­ள­ரு­டன் கலந்­து­பேசி விரை­வில் பதி­ல­ளிப்­ப­தாக அமைச்­சர் அன்று தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் மூன்று மாதங்­கள் கடந்­து­விட்­டன. இன்­று­வரை அவர்­கள் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. எனது கோரிக்­கைக்கு அமைச்­ச­ரி­டம் இருந்து பதி­லும் கிடைக்­க ­வில்லை – என்­றார்.

முகப்பு
Selva Zug 2