செவ்வாய், 17 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

காணிகள் விடுவிப்புக்கு 2 வருட காலஅவகாசம் கேட்கிறது இராணுவம்!

வடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்களாகும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பாதுகாப்பு காரணங்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை பொது மக்களுக்கு வழங்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். “இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்கும் பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு, வருகின்றன. அத்துடன் காணிகளை இழந்துள்ளவர்களுக்கு நட்ட ஈடு அல்லது மாற்று காணிகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.

“வடக்கில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை, வீடுகளை இழந்த பெருமளவானோருக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முகப்பு
Selva Zug 2