திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஜெனீவாவில் தமிழர் தரப்பு!சூடு பிடிக்குமா ஜெனிவா களம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நேற்று மதியம் ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.JENIVAAஇக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தியாகராசா, கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அரசாங்கம் கோரி நிற்கின்ற இவ்வேளையில் இவர்களின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முகப்பு
Selva Zug 2