புதன், 13 டிசம்பர் 2017
Selva Zug 2

200 ஆவது நாளை எட்டும் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம்!

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 198ஆவது நாளாகவும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் இன்று 198 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

பல்வேறு சந்திப்புக்கள் நடந்தும் விரைவில் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும் எப்போது விடுவிக்கப்படும் என்பதறியாது மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் 200 நாளை அண்மிக்கும் நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலை தீர்க்க இந்த அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2