திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

ஈபிஆர்எல்எவ்வினை ஏமாற்றிய தமிழரசு!

20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு கிழக்கு மாகாணசபையினில் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளை தமது கட்சி சார்பு மாகாணசபை உறுப்பினரான துரைரெட்ணம் ஏமாற்றப்பட்டு வாக்களிக்க செய்யப்பட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி 20 வது திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் செய்யவுள்ளதாக கூறப்படும் சில திருத்தங்களை சட்டமா அதிபர் நீதிமன்றில் கூறியுள்ளார். அந்த திருத்தங்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆதரவை வழங்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைக்கின்றது.
18 மாதங்களுக்கு குறைவாக மாகாணசபையின் மிகுதி காலம் இருந்தால் அந்த காலப்பகுதிக்கான ஆட்சி ஆளுநரிடம் கையளிக்கப்படும். நாங்கள் கேட்கிறோம் இந்த 18 மாதங்களின் ஆட்சியை ஆளுநரிடம் வழங்கினால் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்படும்.
பௌத்த மயமாக்கல் சுதந்திரமாக நடக்கும், அரச திணைக்களங்களில் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் களமிறக்கப்படுவார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதகமான பல செயற்பாடுகளை அரசாங்கம் செய்யும். எனவே இவ்வாறான நிலையில் 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது.
மேலும் 18 மாதங்களுக்கு அதிகமான காலம் உள்ள நிலையில் மாகாணசபை கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் நடத்துவதென்ற தீர்மானம் சிறீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழரசு கட்சி போன்ற பெரிய கட்சிகளுக்கு மட்டுமே பொருத்தமா னதாக அமையும். அவ்வாறான நிலையில் பெரிய கட்சிகளின் இருப்பை நிலை நிறுத்தவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

suressures2

எனவே 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம் என கூறும் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் தீர்மானம் எடுத்திருப்பது ஜனநாயகம், அதிகாரபகடிர்வு பற்றி பேசகூடியவர்களுக்கு அழகானது அல்ல.
இவ்வாறான நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது ஆதரிக்கிறோம் என கூறுவது மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது. எனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படாவிட்டாலும் 20 வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அப்போதே கிழக்கு மாகாணசபையிலுள்ள தங்கள் கட்சி சார்பு உறுப்பினரான துரைரெட்ணம் ஏமாற்றப்பட்டு வாக்களிக்க செய்யப்பட்டதாக தெரிவித்தார்.குறிப்பாக திருத்தம் மூலம் பிரச்சினைகளிற்கு முடிவுகட்டப்பட்டுவிட்டதாக தெரிவித்து வாக்களிக்க தமிழரசின் அமைச்சர்களான தண்டாயுதபாணி மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோர் கோரியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2