திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஈழ  மண்ணில்  இந்திய அரசின் அராஜகம்!  ஜெ.டிஷாந்த்

எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவு தூபிகள் எம் மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன.

ஆனால் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை உயிருடன் கொளுத்திய அதிகாரிக்கு நினைவு கல்லறையை புனரமைத்து நினைவு படுத்துகிறது .

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய காட்டு மிராண்டித்தனங்களை நினைவு கூர்வது அனைவரது கடமையாகும் .4

1989-06-05 அதிகாலை விடிந்தும் விடியாத விடிகாலை பொழுது, நடக்கப்போவதை ஏதுமே அறியாத அந்த இரு கிராமங்களும் அமைதியாய் களித்தது அந்த  விடிகாலையை.

வாதரவத்தை – நான்கு பக்கமும் உப்புநீரால் சூழப்பட்ட ஒரு சிறிய -தரைத்தோற்ற அமைப்பை கொண்ட நிலப்பரப்பு . அன்றாட வாழ்வில் இக்கிராம மக்கள் கூலி வேலை ,விவசாயங்களையே நம்பி வாழும் சூழல் , அதுவும் இக்கிராமத்தில் விவசாய வளர்ச்சியை எதிர் பார்ப்பது பயனற்றது இதனால் கூலி வேலை என்றாலும் ,விவசாயம் என்றாலும் அயல் கிராமங்களையே நம்பி வாழும் மக்கள் .

புத்தூர்– வாதரவத்தையின் அயல் கிராமம்

வெளிப்பிரதேசங்களில் இருந்து ஊருக்குள் வருபவர்களால் ஜாடை மாடையாக கசிய விடப்பட்ட செய்தி இது யாரையோ புத்தூர் தகரம் பிள்ளையார் கோவிலடியில் சுட்டுப்போட்டு எரிச்சு வைச்சிருக்கினமாம் இந்தியன் ஆமி8

.தங்கள் பிள்ளைகள் சென்று கொண்டிருக்கும் நேரத்தை ஒவ்வொரு தாய்மாரும் மனக்கண்ணில் எண்ணி பதைபதைத்துக்கொண்டனர் .

ஏனெனில் வாதரவத்தை பகுதி மக்கள் குறித்த பாதை வாதரவத்தை-தகரம்பிள்ளையார்-வீதி புத்தூர் ஊடாக பயணம் செய்வது வழமை .

சுடப்பட்டு இறந்து இருப்பவர்களை காண ஊரே திரண்டது .

என்மகனா என்று கேட்கும் தாயும் , என் கணவனா என்று கேட்கும் துனைவியர்களும் அழுது அவ்விடத்தை நிரப்பி தம் ஒவ்வொரு உறவுகளையும் தேடத்தொடங்கினர் .

இந்த இந்திய அரசின் படுகொலை தாக்குதலுக்கு

வாதரவத்தையச்செர்ந்த

தம்பிராசா- லட்சனகுமார்

தளையசிங்கம்- தயானந்தராசா

சுந்தரராசா- வைகுந்தநாதன்

வல்லிபுரம்- துரைராஜசிங்கம்

வல்லிபுரம்- பாலசிங்கம்

தம்பி முத்து யோகேந்திரம்

ஆகிய வாதரவத்தையின் புதல்வர்களும்7

இதேவேளை இந்திய அரசின் கொலைவெறி தாக்குதலுக்கு சம்பவ இடத்தில் தோட்டவேலை செய்துகொண்டிடுந்த

புத்தூர் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த

தவசி- நல்லதம்பி

சின்னவன் -சிவபாதம்

கந்தையா

ஆகிய புத்தூர் மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இறந்து கிடப்பவர்கள் மத்தியில் உறவுகளை தேடுபவர்களுக்கு எரியூட்டப்பட்ட உடற் கட்டைகள் தான் மிச்சம் கிடைத்தன

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் பற்றி விபரிக்கிறார் இறந்தவர்களில் ஒருவரான சின்னவனின் மனைவி வஸந்தலீலா

”தம்பி நாங்கள் அதுல தோட்டம் தான் செய்யிரனங்கள் ,எங்கட வீடுகளும் பக்கத்தில தான் இருக்கு .அதுல நாலைந்து வீடுகள் இருந்துச்சு எங்கட நிலையான வீடு , கல்வீடு . விடியப்பரம் வந்துட்டாங்கள் .எண்டமனுஷனையும் , மாமாவையும் அவற்ற பெரியப்பாவையும் கூட்டிக்கொண்டு அங்கால போனாவங்கள் ,பொம்பளையல் எங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு தகரம்பிள்ளையார் கோவிலுக்க கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டாங்கள் .

அதே நேரத்தில வாதரவத்தையால வந்த ஆறு பேரையும் பிடிச்சு எங்கட மனுஷன் இருந்த இடத்துக்கு கூட்டி போனவங்கள் .அதுகளும் மணல் ஏத்த போற பிள்ளையள

எல்லாரையும் சுட்டு சத்தம் கேட்டுது . கொஞ்ச நேரத்துல அவங்கள் வாதரவத்தை பக்கம் போட்டாங்கள் .நாங்கள் வெளில வந்து பார்த்தால் எரிச்சுகுறையலா விட்டுப்போயிருக்கிரான்கள் , அதுக்குள்ள என்டா மனுசனும் இருந்தவர் , ஒருத்தரையும் அடையாளம் காண ஏலாம இருந்துச்சு

நான் தம்பி எண்பத்திரண்டாம் ஆண்டு கலியாணம் கட்டினான் . சம்பவம் நடக்கும் பொது எனக்கு மூன்று பிள்ளைகள் . இருக்கிற வீட்டைகூடி வேற சொந்தக்காரர் தான் பரிதாபம் பார்த்து தந்தவை . இவ்வாறு கூறி முடித்ததும் அந்த கண்களில் கண்ணீர் முட்டியது .

நா தழுதழுக்க அந்த தாயின் வார்த்தைகளில் இருந்து வேறெந்த வார்த்தைகளையும் உதிர முடியவில்லை .

யாராச்சும் வந்து கேட்பங்கள் தம்பி இது யார்கட்டின தூபி .என்று . செத்தவங்கலட நினைவாக இயக்கம் தான் தம்பி அதுல தூபி கட்டினது , உடனையே நான் சொல்லிப்போடுவன் எங்களுக்கு தெரியா என்று . உதுகளால தம்பி கரைச்சல்

இருக்கிற பிள்ளளைகளையாச்சும் காப்பாத்திட்டன் என்ற பெருமையோட இனி சாகுவன் மோனை”

என்ற வார்த்தையுடன் எழுந்து சென்றார் அந்த தாய் –6

சுட்டு எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த வீதியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இரத்தக்கறைகளை காணக்கூடியாதாக இருந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்

சம்பவம் பற்றி சபவத்தில் கணவனை இழந்த யோகேந்திரம் பத்மாவதி கருத்து கூறுகையில்

”எனக்கு தம்பி ஒண்டும் தெரியாது . வழமையா வெளிக்கிட்டு போற போல தான் தம்பி போச்சுதுகள் .விடியப்புறம் ஒரு ஐந்து மணி ஐந்தரை இருக்கும் வெடிச்சத்தங்கள் கேட்டுது . நாங்கள் நினைச்சுக்கூட பார்க்கலை எங்கட மனுசனும் அதுக்குள்ளே தான் என்று , எங்கட சனம்கள் எல்ல்லாம் போச்சுதுகள் அதுகலோடபோய் தான் தம்பி தெரியும் ஏன்டா மனுசனும் என்று .5

பிறகு தம்பி நாங்கள் வாதரவத்தை ல இருந்து அக்காச்சி எழுச்சி கிராமத்துக்கு வந்துட்டம் . இயக்கம் தான் வீடு கட்டி தந்த . . இப்பவும் தம்பி நடந்த சம்பவங்களை நினைக்க நடுங்குது”

என கூறியவாறு கண்களை மறுபுறம் திருப்பி துடைத்துக்கொண்டார்

vaatharavaththai (1)
இடித்தளிக்கப்படும் போது தூபி

இதே வேளை இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக தமிழீழ விடுதலைப்புலிகளால் நினைவு தூபி ஒன்று சம்பவம் இடம்பெற்ற அப்பகுதியில் தொண்ணூறாம் ஆண்டளவில்நிறுவப்பட்டிருந்தது  .

வன்னி யுத்தம் நிறைவிற்றதன் பிற்பாடு இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் அவ் நினைவு தூபி இடித்தளிக்கப்பட்டது.10 11 9


புத்தூர் அருகே  கப்டன் அக்காச்சி எழுச்சி குடியிருப்பு  எனும் கிராமம் .

விடுதலைப்புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி ‘’கம்யூன்’’.

இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை ‘’கப்டன் அக்காச்சி எழுச்சி குடியிருப்பு’’ என  பெருமையாக சொல்கிறார்கள் .

2
தமிழீழ விடுதலை புலிகளால் அமைத்து கொடுக்கப்பட்ட அக்காச்சி எழுச்சி குடியிருப்பின் வீடுகளில் ஒன்று

விடுதலைப்புலிகளால் கட்டிக்கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே  இன்னமும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிக்கின்றன .

40 வயதை தாண்டியவர்கள் எவரை கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி சிவலைப்பேரி பாண்டி கதையை கூறுவது போல கதைகதையாக சொல்கிறார்கள் .

கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு உறங்கி தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது உழைத்து அவர்களின்  இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்10

கொல்லப்பட்ட எம் மக்களின் நினைவு தூபிகளும் விதையாகிப்போன மாவீரர்களின் உறங்கும் இல்லங்கலேல்லாம் இடித்தளிக்கப்படும் போது ………..

கொலை செய்தவர்களுக்கு எம் கண்முன்னால் தூபிகள் எழுப்பபடுகின்றன

 

முகப்பு
Selva Zug 2