புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

ஊடகப்படுகொலைகளிற்கு நீதியில்லை!

வடகிழக்கினில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பினில் நல்லாட்சி அரசு தொடர்ந்தும் கள்ள மௌனம் காத்துவருவதாக தமிழ் ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.தற்போது ஒரு இடைக்கால தீர்வாக ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இந்த நல்லாட்சி அரசில் முற்றாக இல்லாமல் போயுள்ளமையினை நல்லாட்சி அரசு பிரச்சாரம் செய்துவருகின்றது.
அண்மையினில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இந்த நல்லாட்சி அரசில் முற்றாக இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் தொடர்பாக அனைவருக்கும் தெரியும். தற்போது வெள்ளை வான் கடத்தல் இல்லை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் இல்லை, அவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இல்லை.

அவ்வாறான அனைத்து செயற் பாடுகளும் எமது நல்லாட்சியில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு உயர் அதிகாரியையும் விமர்ச னம் செய்யும் அளவுக்கு ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
எமது நல்லாட்சி அரசில் யார் பிழை செய்தாலும் அவர் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும், பிழைகள் காணப்படும் இடத்து சிறப்பு குழு அமை க்கப்பட்டு அவர்கள் மேல் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதில் பிழைகள் செய்தவர்கள் என இனங் காணப்படும் நபர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றார்கள் அல்லது தண்டனை அனுபவிக்கின் றார்கள் இந்த நிலை தொடருமென தெரிவித்துள்ளார்.
இதனையே விமர்சித்துள்ள தமிழ் ஊடக அமைப்புக்கள் இதுவரை கொல்லப்பட்ட அல்லது காணாமல் போயுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பினில் கள்ள மௌனம் சாதித்துவருகின்ற அரசு தற்காலிக நிவாரணத்தை பிரச்சாரப்படுத்துவதை மட்டுமே செய்வதாகவும் தெரிவித்துள்ளன.

முகப்பு
Selva Zug 2