திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

டெனீஸ்வரனிற்கு 24 மணிநேர காலக்கெடு!

பா.டெனிஸ்வரன் தான் பதவி விலகும் அறிவிப்பை நாளை அறிவிக்காதவிடத்து கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சிறிக்காந்தா குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலை இயக்கம் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கோடு இன்று 12ம் திகதி காலை 10.30மணியளவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா காரியாலயத்தில் அக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பல விடயங்கள் பேசப்பட்டாலும் அமைச்சர் டெனிஸ்வரனின் விவகாரமே முக்கிய இடம்பிடித்துள்ளது இக்கூட்டத்தில் டெனிஸ்வரன் பதவிவிலக வேண்டுமென்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டமையினால் அவருக்கு நாளைவரை அவகாசம் வழங்கப்பட்டத்தை தொடர்ந்து கூட்டத்தின் இடையில் வெளியேறியுள்ளார்.
தலைமைக்குழு உறுப்பினர்களின் 21 பேரில் பதினைந்து பேர் வரை கலந்து கொண்டனர். செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, விந்தன், ஹென்ரி மகேந்திரன், இந்திரகுமார் பிரசன்னா, கணேஸ், கீரன், சிவாஜிலிங்கம், குணசீலன் மற்றும் ஆறு நாடுகளின் கிளைப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் 3 விடயங்கள் ஆராயப்பட்டன. அமைச்சர் டெனிஸ்வரன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை. புதிய அமைச்சர் தேர்வு, உள்ளூராட்சி தேர்தலிற்கு தயாராவது,20வது திருத்தத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இறுதியாக டெனிஸ்வரன் தன்னிலை விளக்கம் அளித்தார். முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டதற்கு தன்னிலை விளக்கமளிக்க இரண்டு வாரம் காலஅவகாசம் அவருக்கு அளிக்கப்பட்டபோதும்,; இன்று நேரில் விளக்கமளித்தார்.
முதலமைச்சரை அதிகம் குற்றம் சாட்டிய அவர் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இருவரை பதவியை தியாகம் செய்ய சொல்லி கேட்டது, மற்றைய இருவர் மீது அடுத்த விசாரணைக்குழு அமைக்க முயன்றது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் கடிதம் கேட்டது, இதனால் தான் ஆத்திரமடைந்து தமிழரசுக்கட்சியுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டதாக கூறினார்.
இதன்போது கட்சி தலைவர், செயலாளர் குறுக்கிட்டு கருத்துக்களை சொன்னார்கள். ரெலோவின் 6 மாகாணசபை உறுப்பினர்களில் 5 பேர் கட்சியுடன் கலந்துபேசி செயற்பட்டபோது, டெனிஸ்வரன் மட்டும் தன்னிச்சையாக செயற்பட்டதாக குற்றம்சாட்டினார்கள். அத்துடன் உடனடியாக பதவியை துறக்கும்படியும் வலியுறுத்தினர்.

தன்னிச்சையாக செயற்பட்டது தவறென்பதை டெனிஸ்வரன் ஏற்றுக்கொண்டார். எனினும், தன்னை அடுத்த நான்கு மாதங்களிற்கு பதவியில் தொடர அனுமதிக்குமாறு கேட்டார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் சில வேலைகளை செய்யவுள்ளதாக கூறினார்.
எனினும், கட்சி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாளைக்கிடையில் பதவிவிலகல் தொடர்பான அவரது முடிவை கட்சி தலைமைக்கு அறிவிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் கட்சி உறுப்பினராக, தலைமைக்குழு உறுப்பினராக, மாகாணசபை உறுப்பினராக தொடர்ந் செயற்படலாமென அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2