திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

நீர்கொழும்பில் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு!

160616084431_gun_afp__512x288_afp_nocreditநீர்கொழும்பில் இன்று (சனிக்கிழமை) மாலை விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நீர்கொழும்பு குறண எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானில் வந்த இனந்தெரியாத குழுவினர் விஷேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகத்தினை மேற்கொண்டதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸார் அப்பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகப்பு
Selva Zug 2