வியாழன், 19 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

ஈபிடிபியின் மிரட்டல்: உன்னிக்கிருஸ்ணன் யாழ்.வரவில்லை!

ஈபிடிபி ஆயுதக்கும்பலது கொலை மிரட்டலையடுத்து தென்னிந்திய இன்னிசைப்பாடகர் உன்னி கிருஸ்ணன் தனது யாழ்.வருகையினை இரத்து செய்துள்ளார். உன்னி கிருஸ்ணனின் இன்னிசை பாடிவரும் எனும் நிகழ்ச்சி இன்று 12ம் திகதி யாழ்ப்பாண நகரினில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.உன்னி கிருஸ்ணனுடன் அவரது சிறுவயது மகளும் பாடகியுமான உத்ரா உன்னிகிருஸ்ணனும் வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் அரச ஒட்டுக்குழுவாக செயற்பட்ட ஈபிடிபி தொடர்பாக உன்னி கிருஸ்ணன் தெரிவித்திருந்த கருத்துக்களினை கண்டித்தும் அவர் யாழ்ப்பாணம் வருகை தந்தால் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்குமெனவும் ஈபிடிபி கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

மக்கள் சேவகனான டக்ளஸ் தேவானந்தாவை கொலைகாரனென்று கூறிய சந்தர்ப்பவாதி உன்னிக்கு யாழ்ப்பாணத்தில் மரியாதை செய்ய காத்திருப்பதாகவும் இந்நிலையில் மகளுடன் வந்து உன்னி கிருஸ்ணன் அவமானப்பட வேண்டாமென தெரிவித்து ஈபிடிபி கொலை அச்சுறுத்தல் சுவரொட்டிகளை வெளியிட்டிருந்தது.

இக்கொலை மிரட்டலையடுத்து தென்னிந்திய இன்னிசைப்பாடகர் உன்னி கிருஸ்ணன் தனது யாழ்.வருகையினை இரத்து செய்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2