வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

ராஜீவ் காந்தி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்குகின்றது சி.பி.ஐ!

rajivஇந்திய அரசியலை பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரணைச் செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.

1986 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் இருந்து 1437 கோடிகளுக்கு கொள்வனவு செய்யப்பட்ட போபர்ஸ் பீரங்கிகள் விவகாரத்தில் ஊழல் இடம் பெற்றுள்ளதாகவும், ராஜீவ் குடும்பத்திற்கு நெருக்கமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி என்பவர் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

எனினும் 1993 ஆம் ஆண்டு குவாத்ரோச்சி இந்தியாவை விட்டு தப்பிசென்ற பின்னர் அவர் சி.பி.ஐ விசாரணைகளுக்கு ஆஜராகாமல் 2013ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

மேலும், குறித்த ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த தொழிலதிபர்களான இந்துஜா சகோதரரகள் 2005ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் முடங்கிப் போயிருந்த குறித்த ஊழல் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மீண்டும் விசாரணை செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

முகப்பு
Selva Zug 2