வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

கிரைமிய துறைமுகத்தை வந்தடைந்தது ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்!

ரஷ்யாவின் புதிய டீசல்-மின் நீர்மூழ்கிக் கப்பலான கிரஸ்னோடர், சிரிய கடற்கரையருகே போர் நடவடிக்கையை நிறைவுசெய்து, கிரைமிய துறைமுக நகரான செவாஸ்டபோலை வந்தடைந்துள்ளது.Crimea-

சிரியா கடற்கரையருகே போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது, சிரியாவின் ஹமா மாகாணத்திலுள்ள ஐ.எஸ். நிலைகளை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டளை தளங்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் மனித வளம் ஆகியன அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிறப்பான செயற்பாட்டின் மூலம் கிரஸ்னோடர் நீர்மூழ்கிக் கப்பலானது கடந்த நான்கு மாதங்களுக்குள் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாக ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தளபதி அலெக்சாண்டர் விட்கோ தெரிவித்துள்ளார்.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது, ரஷ்ய கருங்கடல் கடற்படையில் இணைக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2