வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

கென்ய தேர்தல் முறைகேடு தொடர்பில் ஆராய தீர்மானம்!

கென்யாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அது தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கென்யாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.KENYA

இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரைலா ஒடின்கா, நேற்று (புதன்கிழமை) குற்றஞ்சாட்டியிருந்தார்.

இலத்திரனியல் மூலமான வாக்குகள் எண்ணும் நடவடிக்கையின் முடிவானது, உறுதியானது இல்லை எனக் கூறிய ஒடின்கா, தேர்தல் முடிவுகளையும் நிராகரித்துள்ளார்.

தேர்தல் ஆணையகத்தின் கணினி முறையானது, தேர்தல் முடிவுகளை மோசமாக்கும் வகையில் ஊடூருவியுள்ளதாகவும் ஒடின்கா தெரிவித்துள்ளார். இது, இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையில் 11 சதவீதமான இடைவெளியைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னராக 290 தொகுதிகளின் முடிவுகள், சரிபார்க்கப்பட வேண்டுமென சுதந்திரமான தேர்தல் மற்றும் எல்லை ஆணையகத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2