ஞாயிறு, 22 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது!

MENAVARஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 12 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில், நேற்று (புதன்கிழமை) இரவு இவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை இன்றைய தினம், யாழ். நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் 49 தமிழ மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2