வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு கோரிக்கை!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு ஆழ்கடல் கடற்றொழில்துறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாட்டுத் தலைவர் எம்.கே.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த தினம் 49 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றமையானது, இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறும் செயலாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவை தமது முக்கிய நட்பு நாடு என்று இலங்கை அறிவித்துக் கொள்கின்ற போதும், செயற்பாட்டு ரீதியாக அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்ற போதும், உடனடியாக மேலும் சில மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் தடுப்பில் உள்ள 69 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகள் அனைத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2