வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகள்!

vivasayikal;பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் தமிழக விவசாயிகள், தமது போராட்ட வடிவத்தை மாற்றி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை அமைத்தல் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து, இரண்டாம் கட்டமாக கடந்த 25 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு, மத்திய அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஐந்து விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமைச்சர்களின் கையெழுத்துக்களை திரட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் விரைவில் கையளிக்கவுள்ளதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2