திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஜனாவிற்கு முதலமைச்சர் கனவு –முன்னணி குற்றச்சாட்டு!

த.தே.ம.முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் கிழக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) அவர்கள்அண்மையில் ஊடகமொன்றுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக வெளியிட்ட கருத்திற்கு த.தே.ம.முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் பதிலடிகொடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வருகின்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அறிவித்துள்ள நிலையில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கின்ற முதலமைச்சர் பதவி வாய்ப்பை தடுக்க முயல்வதாக ஜனா குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் இவருடைய கருத்து நகைப்புக்குரியது. கடந்த மாகாண சபைத்தேர்தலில் 11 பெரும்பாண்மையான ஆசனங்களைப்பெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குரிய முதலமைச்சர் பதவியாருடைய கையில் உள்ளதென்பதை முதலில் அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உச்ச ஆதரவு இருந்த நிலையில் 11ஆசனங்கள் கிடைத்திருந்தது அப்படியிருந்தும் முதலமைச்சரை சகோதரமுஸ்லிம்களுக்கு தாரைவார்த்துள்ளார்கள். முதலமைச்சர் பதவியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெற்றிருந்தால் இன்றுகிழக்கில் ஏற்பட்டுள்;ள தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளை தவிர்த்திருக்க முடியும் சகோதர முஸ்லிம்களால்மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்புக்கள் வேலைவாய்ப்பில் காட்டப்படுகின்ற பாகுபாடுகளைநிறுத்தியிருக்கமுடியும். கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்டுவிட்டு தற்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவதும் அதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தடையாக அமைந்துவிடும் என்பதும் அறிவின் ஆழத்தை மட்டிடுகின்றது.

கோவிந்தம் கருணாகரம் (ஜனா) முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் உள்ளது நாங்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக்கொண்டிருக்கும் தரப்பு. சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முதலில் சர்வதேச நீதிமன்றில்நிறுத்தப்படவேண்டியவர் இவர்தான். ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்களை சிங்கள இராணுவத்துடன் இணைந்து கொலை செய்ததுடன் பெரும் எண்ணிக்கையான இழைஞர் யுவதிகளை காணாமப்போகச்செய்துள்ளார். பல குடும்ப விதவைகள் இன்றும் இவரால் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள் அத்துடன் பலயுவதிகளை கற்பழித்துள்ளார். அது மட்டுமல்ல இவரால் படுகொலை செய்யப்பட்டோர்கள் உயிருடன் இருந்திருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும்.

இன்று இவர் தேசியம் பேசிகிறார். தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் அதன் தலைமைத்துவத்தையும் விமர்சிப்பதற்கு இவருக்கு என்ன தகுதியுள்ளது. மோசடி அரசியல் செய்யும் இவரைதமிழ் மக்கள் நன்கு விழங்கி வரப்போகும் தேர்தல்களில் பாடம் கற்பிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணசபையில் இத்தனை தமிழ்த்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்தும் எமது இனம் சார்ந்தும் அதன் இருப்பு பற்றியும் யாரும் இதுவரை செயற்படவில்லை. எமது மக்களுடைய பிரச்சினைகளை இதுவரையும் வெளிக்கொண்டுவரவில்லை. கிழக்கு மக்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தவில்லை வடக்கிலுமிட கிழக்கிலுள்ள மக்களே அதிகம் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்கினார்கள் தற்போதும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கல் பேரழிவைப்போன்று 2007 ஆம் ஆண்டு வாகரையிலும் இனப்படுகொலை நடைபெற்றது. தமிழர்தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கிழக்கு மாகாணசபையில் எந்தக்குரல் ஒலித்தது.?

உலகத்திலுள்ள இருபெரும் தலைவர்களான டேவிற்கமருன் மற்றும் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்தார்கள்; வடக்குக்கு மட்டுமே சென்றிருந்தார்கள். கிழக்கைப்பற்றி யாரும் அவர்களுக்கு கூறவில்லை. இதனாலேயே காலத்தின் தேவை கருதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கிழக்கு மக்களின் பிரச்சினையை வெளிக்கொணரவே போட்டியிடவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளது. இதற்குள் கோவிந்தம் கருணாகரன் முதலமைச்சர் கனவு காண்பது வேடிக்கையானதும் அவரின் அரசியல் அறிவையும் வெளிக்காட்டுகின்றது என்றார்.

 

முகப்பு
Selva Zug 2