ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

அரிசோனா ஆற்றில் மூழ்கி ஒன்பது பேர் உயிரிழப்பு!

கடும் மழையினால் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தினால், நீச்சலில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேர் அமெரிக்காவின் அரிசோனா ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பிராந்தியத்தில் தற்போது கன மழை பெய்து வருகின்ற நிலையிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர்.dyana-pathivu

இதேவேளை, குறித்த அனர்த்தத்தின் போது ஒருவர் காணாமல் போன நிலையில் பொது பாதுகாப்புத்துறையின் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் இரு சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர் தொடர்பான மேலதிக விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

எதிர்வரும் நாட்களிலும் மழை வெள்ளம் நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

முகப்பு
Selva Zug 2