புதன், 22 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

modiபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராணுவ அமைச்சகத்தின் அதிகாரியாக பணிபுரிந்த மஞ்சுநாதா என்பவர் தாக்கல் செய்த மனுவினை டெல்லி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

ராணுவ அமைச்சக விமானப்படை அலுவலகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதென, முன்னாள் ராணுவ அமைச்சகத்தின் அதிகாரி மஞ்சுநாதா, ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், நரேந்திர மோடிக்கும் மனுவொன்றினை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், குறித்த மனுவிற்கு பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவித்து, பிரதமருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி டெல்லி தனி நீதிமன்றில் மஞ்சுநாதா மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவினை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்த நீதிபதி வீரேந்தர் குமார் கோயல், பிரதமர் மோடி மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாதமையினால் சி.பி.ஜ விசாரணை தேவையற்றதென கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

முகப்பு
Selva Zug 2