திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

இந்திய ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் – முதலமைச்சர் வாக்களிப்பு!

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

வாக்களிப்பு காலை 10 மணிக்கு ஆம்பமாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தமது வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.1

குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் பிரதர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.

அத்தோடு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்துள்ளார்.3

இவர்களைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

மாலை 5 மணிவரை நடைபெறும் தேர்தலில், நாடு முழுவதிலும் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 4,120 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது56

முகப்பு
Selva Zug 2