வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

அரசாங்கம் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு!

Chief Minister S. Naseer Ahamedநிதி ஒதுக்கீட்டு விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் பாரபட்சம் மாகாண அபிவிருத்திகளை பாதிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் நிதி ஒருக்கீடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசிலிருந்து ஒரு சதமேனும் கிழக்கு மாகாண சபைக்கு இது வரையில் கிடைக்கவில்லை.

இதனால் கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய நிதி தாமதித்துக் கிடைப்பதால் பொதுமக்களே பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்த அவர், நிதியினை உரிய நேரத்தில் வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

முகப்பு
Selva Zug 2