வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

கூட்டமைப்பின் பேரத்தினில் அமைச்சு பதவிகள்?

தென்னிலங்கையினில் கூட்டாட்சி அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலையினையடுத்து கூட்டமைப்புடன் ரணில் -மைத்திரி தரப்பு பேச்சுக்களினை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தங்களை அமர்வதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்ற நிபந்தனையினை அவர்கள் விதித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துக்கின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அரசாங்கத்திலிருந்து விலகினால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டாட்சிக்காக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன், இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது.
சிறீலங்கான சுதந்திரக்கட்சி சார்ந்தவர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்டம் காணவிடாது, ஆட்சியைக் கொண்டுசெல்வதற்கு தேவையான, பெரும்பான்மையை பெறுவது தொடர்பினில், மேற்படி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

இதன் பிரகாரம் சுமூக நிலையொன்றை ஏற்படுத்த குழப்பம் விளைவிக்கும் சுதந்திரக்;கட்சியினருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை தாரை வார்க்க சம்பந்தனிடம் கோரபட்டதாக தெரியவருகின்றது.அதற்கு பதிலீடாக இரு அமைச்சுக்கள் கூட்டமைப்பிற்கு வழங்கப்படலாமென சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே அமைச்சர் கனவிலிருந்த சுமந்திரன் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அதனை பறிகொடுத்திருந்த நிலையினில் மீண்டும் அவருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.மற்றைய பதவியினை சம்பந்தன் தான் எடுத்துக்கொள்வாரா அல்லது பங்காளிக்கட்சிகளை திருப்திப்படுத்த அதனை சித்தார்த்தனிற்கு வழங்கலாமெனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகப்பு
Selva Zug 2