திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

பிரதேச வாதத்தை கையிலெடுத்த தமிழரசு!

வடமாகாணசபை அமைச்சரவை தொடர்பினில் பிரதேசவாதத்தை தூண்டி சுகாதார அமைச்சராக சத்தியலிங்கத்தை தொடர்ந்தும் கதிரையினிலிருத்த தமிழரசுக்கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது.

தற்போதைய மீன்பிடி அமைச்சரான டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கட்சியால் கோரப்பட்டதற்கு அமைய டெலோ கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.இதையடுத்து வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குருகுலராஜா,ஜங்கரநேசன் இருவரும் பதவி துறக்க கல்வி மற்றும் மகளிர் சமூக அமைச்சுகள் முறையே சர்வேஸ்வரன் ,ஆனந்தி சசிதரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் தற்போது மீன்பிடி அமைச்சும் விந்தன் கனகரட்ணத்திற்கு வழங்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையினில் யாழ்ப்பாண அமைச்சரவையென அதனை அடையாளப்படுத்தி ஆகக்குறைந்தது வன்னியை பிரதிநிதித்துவப்படுத்த சத்தியலிங்கத்தை தொடர்ந்தும் அமைச்சராக இருக்க அனுமதிக்கவேண்டுமென்ற கோசங்கள் உச்சம் பெற்றுள்ளன.இதற்கான தூண்டுதலை சுமந்திரன் மற்றும் சத்தியலிங்கம் அணி தமது முகவர்கள் ஊடாக முன்னெடுப்பதாக சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே முதலமைச்சரிற்கு எதிராகவும் அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவாகவும் வவுனியாவினில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி தலைமையினில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினில் பிரதேசவாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதும் அவை கடுமையான விமர்சனங்களிற்குள்ளானதையடுத்து சத்தியலிங்கம் மன்னிப்பு கோரியிருந்ததும் தெரிந்ததே.

முகப்பு
Selva Zug 2