புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

கனடா ரொறன்ரோவில் நடைபெற்ற தியாகி.பொன்.சிவகுமாரன் நினைவுக்கிண்ண போட்டிகள்

தமிழ் இளையோர் அமைப்பும் கனடியத் தமிழ் விளையாட்டுத் துறையும் இணைந்து நடத்திய தியாகி. பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுக்கிண்ணப் போட்டிகள் ஜூன் 17ஆம் திகதி சனிக்கிழமை கனடா, ரொறன்ரோவிலுள்ள லாமோறெக்ஸ் விளையாட்டுத் திடலில் (L’Amoreaux Sports Complex) நடைபெற்றன. தியாகி. பொன்.சிவகுமாரனுக்கான அவர்களுகக்கு அகவணக்கம் செலுத்திய பின் ஆரம்பமாகிய போட்டியில் 14 அணிகள் பங்குபற்றின. 8 வயது முதல் பெரியோர் வரையில் பங்குபற்றி அனைத்து அணிகளும் மிகவும் உற்சாகத்துடன் பங்குபற்றின.

tyo canada-1

பொன். சிவகுமாரன் அவர்கள் சிறந்ததொரு விடுதலைப் போராட்ட வழிகாட்டியாக அன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் மத்தியில் விளங்கினார். மாணவ பருவத்திலும் தமிழர் விடுதலைக்கான பல செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாடொன்றின்போது பல அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இதற்கு சிறிலங்கா காவற்றுறை மேற்கொண்ட நடவடிக்கையே காரணமாக அமைந்திருந்தது. தமிழ் மக்களது உரிமைகள் பற்றி மக்கள் மத்தியில் எடுத்து விளங்கப்படுத்தியதற்காக சிவகுமாரன் அவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். விடுதலையான பின்னரும் மீண்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், தான் மீண்டும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படலாம் என்ற நிலை அறிந்தும்கூட அவர் விடுதலைக்கான தனது பணியினை செய்துவந்தார். சிறிலாங்காவின் காவற்றுறையின் கைகளில் அகப்பட்டு தான் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதைத் தவிர்க்கும் விதத்தில், அவ்வாறானதொரு நிலை வருமானால், தனது உயிரினை தானே போக்கும் முடிவொன்றையும் அவர் எடுத்திருந்தார். எதிர்பார்த்தபடியே, 1974 ஜூன் 5 அன்று சிறிலங்கா காவற்றுறையின் முற்றுகைக்குள்ளாகிய நிலையில் 24வது வயதில் சயனைட்டை உட்கொண்டு தனது உயிரை தானே முடித்துக்கொண்டார்.

tyo canada-2
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ஆம் நாள் வரும் நினைவு நாளில் உலகெங்குமுள்ள தமிழ் இளையவர்கள் இவரின் இலட்சியப் பயணத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் பல நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே இங்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

அனைத்து மிகவும் நேர்த்தியுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தபோதிலும், சனிக்கிழமை ரொறன்ரோவில் நிலவிய காலநிலை காரணமாக அரைவாசிப் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இன்னொரு நாளில் நடத்துவததென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திகதி பின்னர் எம்மால் அறியத் தரப்படும்.

 

tyo canada-3

tyo canada-4

tyo canada-5

tyo canada-6

முகப்பு
Selva Zug 2