புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

பிரான்சில் ஏவ்றி பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி

ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம், ஏவ்றி தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (17.06.2017) சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஏவ்றி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஏவ்றி தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.மனோகரன் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை பிரான்சு தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளரும் ஏவ்றி தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு.பாலகுமாரனும் தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கிருபாவும் ஏற்றிவைத்தனர்.

IMG_0035 - Copie

தொடர்ந்து ஈகைச்சுடரினை 25.09.1992 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் லெப்.கேணல் சுபன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.அகவணக்கத்தைத் தொடர்ந்து இல்லப் பொறுப்பாசிரியர்கள் தமது இல்லங்களின் முன்பாக மங்கள விளக்கேற்றிவைத்தனர்.

நடுவர்களின் சத்தியப் பிரமாணத்தைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுத்துறையின் போட்டி முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.

IMG_0006 - Copie
திலீபன் இல்லம் , அன்னை பூபதி இ;ல்லம் ஆகிய இல்லங்களிடையே போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. நிறைவாக வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். செயற்பாட்டாளர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிறைவில் திலீபன் இல்லம் அதிக புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
இந்நிகழ்வில் ஏவ்றி மாநகரசபை உறுப்பினர்கள், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்பு பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.​​​​​​​​​​​​

IMG_0009 - Copie

IMG_0008 - Copie

IMG_0013 - Copie

IMG_0016 - Copie

IMG_0042

IMG_0043

IMG_0046

IMG_0049

IMG_0050

IMG_0057

IMG_0056

IMG_0054

IMG_0053

IMG_0051

IMG_0059

IMG_0060

IMG_0066

IMG_0068

IMG_0157

IMG_0154

IMG_0151

IMG_0148

IMG_0077

IMG_0164

IMG_0168

IMG_0174

IMG_0178

IMG_0181

IMG_0190

IMG_0188

IMG_0184

IMG_0183

IMG_0182

IMG_0193

IMG_0200 - Copie

IMG_0282 - Copie

IMG_0285 - Copie

IMG_0306 - Copie

IMG_0418

IMG_0413

IMG_0380 - Copie

IMG_0355

IMG_0320

முகப்பு
Selva Zug 2