புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

சமாதானத்திற்காக பாடுபடும் தமிழரசு கட்சி!

vavuniyaவடமாகாண பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வர தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான சத்தியலிங்கம் மற்றும் புதிய உறுப்பினரான டெனீஸ்வரன் ஆகிய இருவரும் அமைச்சு பதவி விலகாமல விசாரணை செய்ய முன்வருமாறு முதலமைச்சரிடம் மதகுருக்கள் கோரியுள்ளனர். எனினும் முதலமைச்சர் அதற்குரிய பதிலை அளித்துள்ளமை பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே இதற்கு முதலமைச்சர் இணங்குவராயின் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று புதிய விசாரணைக்குழு அமைக்க வேண்டியிருக்கும்.இதன் மூலம் முன்னைய விசாரணைக்குழு தொடர்பினில் முதலமைச்சர் அதனை நிராகரித்தமை உறுதியாவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் இந்த முடிவை எடுப்பாராயின் சகல அமைச்சர்களையும் பதவியில் வைத்து புதிய விசாரணை செய்வதே நீதியானதும் பக்கசார்பற்றதாகவும் இருக்கமுடியுமெனவும் அத்தரப்புக்கள் கூறுகின்றன.

இதேவேளை முதலமைச்சரிற்கு ஆதரவாக தமிழரசுக்கட்சியின் ஒரு சாராரும்,ஈபிடிபி மற்றும் பொதுஜன ஜக்கிய முன்னணியின் ஒரு பகுதியினரும் தாமாகவே முன்வந்து கைகொடுத்துள்ளனர்.இதனால் தொடர்ந்தும் தமிழரசுக்கட்சி ஆளுநரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பலவீனமடைந்து செல்கின்றது.இந்நிலையினில் விரைந்து சமாதானமொன்றை ஏற்படுத்த தமிழரசுக்கட்சி தரப்பினில் பங்காளிக்கட்சிகள் ஊடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2