புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

நீதிமன்று படியேறுகின்றார் பொ.ஜங்கரநேசன்!

முறையற்ற வகையினில் செயற்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தான் நீதிமன்ற படியேறப்போவதாக முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று தனது வதிவிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை கூட்டியிருந்த அவர் தான் கொண்டிருந்த தமிழ் தேசிய நிலைப்பாடு காரணமாகவே இத்தகைய குற்றச்சாட்டுக்களினை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாக தெரிவித்ததுடன் அமைச்சரவை மீதான குற்றச்சாட்டு முதலமைச்சரிற்கு எதிராக பின்னப்பட்டுவந்த சதியின் ஒரு அங்கமெனவும் தெரிவித்தார்.Ayngaraneshan

நிதி மோசடி தொடர்பினில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தன் மீதான விசாரணை அறிக்கையினில் எங்குமே நிதி மோசடி மற்றும் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்களினை எழுப்பியிருக்கவில்லையென தெரிவித்த அவர் அதுவொரு சோரம் போன விசாரணைக்குழுவெனவே தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

விசாரணைக்குழு முடிவொன்றை எடுத்து வைத்துக்கொண்டே ஆதாரங்களை தேடியுள்ளதாக தெரிவித்த அவர் பொதுசன அபிப்பிரயாமும் விசாரணைக்குழு நீதியாக செயற்படவில்லையென்றே உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையினில் தன் தொடர்பினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊழல், நிதி மோசடிகளுடன் தொடர்பினில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களினை நிராகரித்துள்ள அவர் இதேவேளை வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதனும் அதே குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையினில் தன் மீது அறிக்கைக்கு முரணாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எவராயினும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முதலமைச்சரிற்கு எதிராக ஆளுநரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையினை கையளித்ததன் மூலம் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தனது பதவிக்கான கௌரவத்தை இழந்துவிட்டதாக தெரிவித்த பொ.ஜங்கரநேசன் தொடர்ந்தும் அவர் அப்பதவியினை வகிப்பது பொருத்தமானதாவென கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையினில் நடந்தது முதலமைச்சரிற்கு எதிரான சதி. அவ்வகையினில் முதலமைச்சரிற்கு ஆதரவாக நின்றிருந்த நாம் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றோமெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2